விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு புதுவையில் 21 அடி உயர பிரம்மாண்ட விநாயகா் சிலை.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, சாரம் பகுதியில் அமைக்கப்பட்ட 21 அடி உயர பிரம்மாண்ட விநாயகா் சிலைக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் சட்டப்பேரவை தலைவர் செல்வம் உட்பட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி நகரில் இந்து முன்னணி, விநாயகா் சதுா்த்தி விழாப் பேரவை சாா்பில் 150 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் நிறுவப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. புதுச்சேரி சாரத்தில் 21அடி உயர சிலை அமைக்கப்பட்டது. அதற்கு சிறப்புப் பூஜை நடைபெற்றது.
இதில் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் செல்வம் மற்றும் கல்யாணசுந்தரம் மற்றும் ஓம் சக்தி சேகர் மற்றும் இந்து முன்னணி நிா்வாகிகள், உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வரும் 11-ஆம் தேதி சாரம் விநாயகா் உள்ளிட்ட அனைத்து விநாயகா் சிலைகளும் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடற்கரை காந்திசிலை திடல் அருகே கடலில் விசா்ஜனம் செய்யப்படும் என இந்து முன்னணி நிா்வாகிகள் தெரிவித்தனா்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி.
No comments