Breaking News

பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 206 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி. பொன்னேரி எம்எல்ஏ கலந்து கொண்டு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மேல்நிலை கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 206மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். 

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய எம்எல்ஏ துரை.சந்திரசேகர் அனைத்து மாணவர்களும் +2 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும், கல்விக்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தி வரும் நிலையில் அனைவரும் கல்வியில் முன்னேற வேண்டும் எனவும் கேட்டு கொண்டார். வாழ்க்கையில் நண்பர்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். திருக்குறள் மூலம் எடுத்துக்காட்டு கூறி மாணவர்கள் மத்தியில் பேசிய எம் எல் ஏ சில கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களை கேட்டு மாணவர்களிடம் கலந்துரையாடினார். 

No comments

Copying is disabled on this page!