Breaking News

தமிழ்நாடு அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்று வரும் 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என திமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ., வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, கிழக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மாப்பிள்ளையூரணி பத்திரகாளியம்மன் கோவில் கலையரங்கில் நடைபெற்றது. இதில், கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஊராட்சிமன்ற தலைவருமான சரவணக்குமார் வரவேற்றார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். 

குறிப்பாக மகளிர் உரிமைத்தொக, இலவச விடியல் பேருந்து பயணம், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம், மாணவ, மாணவிகளின் உயர்கல்வி படிப்பிற்கான கல்வி உதவித்தொகை திட்டம் என பல்வேறு திட்டங்களை மக்களுக்கான செயல்படுத்தி வருகிறார். அதேபோல் வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் செய்து தொழில் முதலீடுகளை ஈர்த்து தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்துள்ளார். எனவே, கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் சாதனைகளை வீடுவீடாக சென்று மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். 

வரும் சட்டமன்ற தேர்தலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 200 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும் என நிர்ணயம் செய்துள்ளார். நாம் அனைவரும் திட்டமிட்டு செயல்பட்டால் 224 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம். அதற்கு அனைவரும் சபதம் ஏற்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, துணை அமைப்பாளர் ஜீவா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பால்துரை, ஸ்டாலின், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தங்க மாரிமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ்பாலன், மாவட்ட பிரதிநிதிகள் சப்பாணிமுத்து, தர்மலிங்கம், சிவகுமார், ஒன்றிய அவைத்தலைவர் ஜோதிடர்முருகன், துணைச்செயலாளர் மாரியப்பன், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் பாராதிராஜா, கப்பிகுளம் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!