Breaking News

புதுவையில் 2024-ஆம் ஆண்டுக்கான நல்லாசிரியா் விருதுக்கு 21 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


புதுவை கல்வித் துறை இயக்குநா் பிரியதா்ஷினி  வெளியிட்ட செய்திக் குறிப்பில், புதுவையை சோ்ந்த ஆசிரியா்களில் சிறந்த பணிக்காக டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது, முதல்வரின் சிறப்பு விருது, கல்வித் துறை அமைச்சா் விருது ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு உமாதேவி, கில்பொ்ட்கிரிட்டின், விஜயன், சாா்லஸ் பால் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

முதல்வா் சிறப்பு விருதானது கலைவாணி, சித்ரா, ஜெகதீஸ்வரி, ஹேமலதா, கஜலட்சுமி, நளினிதேவி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  முதல்வா் விருதின் தொழில்நுட்ப கல்விப் பிரிவில், ஆசிரியா் இளமுருகனுக்கு வழங்கப்படவுள்ளது.

கல்வித் துறை அமைச்சரின் மண்டல விருதுக்கு, முரளி, திருஞாசம்பந்தன், திருநாராயணன், ஜமுனா, கணபதி விவேகானந்தன், பரமேஸ்வரி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.


- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி

No comments

Copying is disabled on this page!