Breaking News

வேலூர் மாவட்டத்தில் 2021 முதல் 2024 வரை கடந்த 3 ஆண்டுகளில் 1336 விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின் இணைப்பு விவசாயிகள் மகிழ்ச்சி


முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் 1990 ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு இலவசமாக மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வேளாண்மை உணவு தேவைக்காக மட்டும் அதனைத் தொழிலாக கருதுபவர்கள் இல்லை விவசாயிகள் விவசாயம் என்பது நமது தமிழ் பயன்பாட்டில் கலந்தது ஒன்று எனவே வேளாண்துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிமுகப்படுத்தினார் அதில் முக்கியமான ஒன்றுதான் விவசாயிகளுக்கு முனை மின்சார இணைப்பு வழங்குதல் தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன்  2021,2022 ஆம் ஆண்டில் 1 இலட்சம் இலவச மும்முனை மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.



வேலூர் மாவட்டத்தில் மட்டும் 2021,2022 ஆம் நிதி ஆண்டில்  1041 விவசாயிகளுக்கு ரூபாய் 449,712 இலட்சம் மதிப்பிலும் 2022,2023 ஆம் நிதி ஆண்டில் 230 விவசாயிகளுக்கு ரூபாய் 99.36 லட்சம் மதிப்பிலும் 2023,2024 ஆம் நிதி ஆண்டில் 65 விவசாயிகளுக்கு ரூபாய் 28.08 இலட்சம் மதிப்பிலும் வழங்கப்பட்டுள்ளது.


இதற்கான செலவினத்தொகை ரூபாய் 5 கோடியே  80 இலட்சம் வேளாண்மை துறையின் மூலம் மின்சார வாரியத்திற்கு மானியமாக வழங்கப்பட்டுள்ளது இந்த இலவச மும்முனை மின் மின் இணைப்பு பெற்று பயனடைந்த பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்


- வேலூர் மாவட்ட செய்தியாளர்  எஸ். விஜயகுமார்

No comments

Copying is disabled on this page!