அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு 2026 ஒரு நிறைந்த பதிலாக இருக்கும் என மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு.
மன்னார்குடியில் உள்ள திருவாரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்க உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலாளருமான ஆர்.காமராஜ் எம் எல் ஏ கலந்து கொண்டு பேசியதாவது 2 கோடி உறுப்பினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு எது பதிலாக இருக்கும் என்றால் 2026 ஒரு நிறைந்த பதிலாக இருக்கும் என்று தெரிவித்து கொள்கிறேன்.
உறுப்பினர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் தொடர்ந்து ஆதரித்து கொண்டிருக்கின்ற இயக்கம் அதிமுக .திமுகவை பொறுத்தவரை இடைப்பட்ட காலங்களில் அதிமுகவில் ஏதாவது பிரச்சினை இருக்கின்ற போது அதை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த இயக்கம்தான் திமுகவே தவிர அந்த இயக்கம் ஒட்டுமொத்தமாக பொதுமக்களாலே ஆதரித்து வந்த இயக்கம் திமுக கிடையாது.
இன்றைக்கும் அதே நிலைதான் கூட்டணிகள் எல்லாம் வைத்துக் கொண்டு ஆட்சி நடத்துகின்ற இயக்கம் தான் திமுக எனவே சகோதரர்களே வருங்காலத்தில் அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு மீண்டும் அண்ணன் எடப்பாடியார் முதலமைச்சர் ஆவதற்கும் இயக்க பணி ஆற்ற வேண்டும் என்றார்.
அதனை தொடர்ந்து திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட மாவட்டம் முழுமையும் உள்ள அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் சிவா ராஜமாணிக்கம், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் பாலாஜி, தொழிற்சங்க மாவட்ட தலைவர் வீரமணி, நகர அதிமுக செயலாளர் ஆர்.ஜி.குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments