செம்பனார்கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல்.
செம்பனார்கோவில் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் வருவாய்துறை உணவு பாதுகாப்புத் துறையினர் நடத்திய சோதனையில் ஹான்ஸ், கூல்லிஃப், விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு சீல்வைத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை. இருவர் மீது வழக்குப்பதிவு செய்து ஒருவரை செம்பனார்கோவில் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா மற்றும் ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இளைஞர், முதியர்வர்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப், கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதைகளுக்கு அடிமையாகி வருகின்றனர்.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் கஞ்சா மற்றும் ஹான்ஸ் குட்கா போன்ற போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தடைசெய்யப்பட்ட பொதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செம்பனார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் இன்று வருவாய்துறை, உணவு பாதுகாப்புத்துறை, காவல்துறை, ஊராட்சி ஒன்றிய நிர்வாக அதிகாரிகள் ஒருங்கிணைந்து சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் விளநகர் மெயின் ரோட்டில் உள்ள சுப்பிரமணியன்(65) என்பவரது பெட்டிக்கடை, செம்பனார்கோவில் கீழமுக்கூட்டு பகுதியில் ஆனந்தராஜ்(38) என்பவருக்கு சொந்தமான வெற்றிலை மண்டி கடையில் அரசால் தடை செய்யப்பட்ட சட்டவிரோதமாக புகையிலை மற்றும் பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட 1900 பாககெட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இரண்டு கடைகளுக்கும் சீல் வைத்து தலா ரூ. 25 ஆயிரம் என ரூபாய் 50 ஆயிரம் அபராதம் விதித்தனர். தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விறபனை செய்த சுப்ரமணியன், ஆனந்தராஜ் மீது செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சுப்ரமணியனை எச்சரித்து ஜாமீனில் விடுவித்தனர். தடைசெய்ய்பபட்ட புகையிலை பொருட்களை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments