திண்டிவனம் அடுத்த விழுக்கம் கிராமம் அருகே இரண்டு அரசு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று உரசியதால்; ஜன்னலில் கைவைத்துக்கொண்டு வந்த பயணியின் கை துண்டானது.
திருக்கோவிலூரில் இருந்து வேட்டவலம், நல்லாண்பிள்ளை பெற்றால், செஞ்சி, திண்டிவனம் வழியாக சென்னைக்குச் செல்லும் அரசு பேருந்து நேற்று காலை 8.30 மணியளவில் திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்தது. திண்டிவனம் அடுத்த விழுக்கம் கிராமம் அருகே அரசு பேருந்து வந்து கொண்டிருந்த பொழுது எதிர் திசையில் சென்னையில் இருந்து திருவண்ணாமலை வழியாக திருப்பத்தூர் செல்லும் மற்றொரு அரசு பேருந்து ஒன்றோடு ஒன்று உரசி சென்றதால் பேருந்தின் கண்ணாடிகள் நொறுங்கியது.
இதில் பேருந்தில் முன் புறத்தில் அமர்ந்திருந்த பயணிகள் ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் திருவண்ணாமலை மாவட்டம் கெங்கநந்தல் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் யுவராஜ் (40) என்பவருக்கு கை தூண்டான நிலையில் சின்னசேலம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த அப்பாவு மகன் மணிகண்டன் (25) செஞ்சி அடுத்த ராஜாம் புலியூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மனைவி கோவிந்தம்மாள் (25), விபத்தில் காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கிருந்து யுவராஜ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இந்த விபத்து குறித்து ரோஷசனை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments