Breaking News

மீஞ்சூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 75 கிலோ மாவா உள்ளிட்ட குட்கா பொருட்கள் பறிமுதல். இருவர் கைது


திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நாலூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் ஒன்றை மடக்கி சோதனையிட்டதில் மூட்டையில் தடை செய்யப்பட்ட மாவா, ஜர்தா உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அருகே உள்ள வீடு ஒன்றிலிருந்து மாவா பொருட்களை கடையில் விற்பனைக்காக கொண்டு செல்வது தெரிய வந்தது. 

தொடர்ந்து குறிப்பிட்ட இடத்தில் உள்ள வீட்டில் காவல்துறையினர் சென்று சோதனை மேற்கொண்டதில் மூட்டை, மூட்டையாக தடை செய்யப்பட்ட மாவா, ஜர்தா உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து சுமார் 75 கிலோ மாவா உள்ளிட்ட குட்கா பொருட்களை மீஞ்சூர் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த கௌதுல் ஆலம் (50) ராஜேஷ் (42) ஆகிய இருவரை மீஞ்சூர் போலீசார் கைது செய்தனர்.

No comments

Copying is disabled on this page!