Breaking News

திண்டிவனம் அருகே மது அருந்திக் கொண்டிருந்த நண்பர்களுக்குள் மோதல் ஒருவருக்கு குவாட்டர் பாட்டிலால் குத்து மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை தாக்கிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வண்டிமேடு பகுதியில் உள்ள ஒரு லாட்சில் பாஞ்சாலம் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் பவித்ரன்( 25) திண்டிவனம் அருகே உள்ள அட்டை கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவரது நண்பர்கள் தென்பசியார் கிராமத்தைச் சேர்ந்த அசோகன் மகன் அருண்குமார் (25) மேலும் சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் ஷியாம் (38) ஏற்கனவே பழைய கொலை வழக்கில் தொடர்புடையவர், ஆகியோர் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது மூவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது இதில் அருண்குமார் மற்றும் ஷியாம் ஆகியோர் பவித்திரனை குவாட்டர் பாட்டிலால் குத்தி தாக்கியுள்ளனர். 


இதில் பவித்ரனுக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் இருவரும் சேர்ந்து பவித்திரனை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் கீழே தடுக்கி விழுந்து காயம் ஏற்பட்டதாக கூறி சேர்த்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த திண்டிவனம் போலீசார் இருவரையும் விசாரித்த போது இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக பவித்திரனை தாக்கியது தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து பவித்திரனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவீர சிகிச்சை பெற்று வரும் நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

No comments

Copying is disabled on this page!