புதுவையைச் சோ்ந்த இருவரிடம் மா்ம நபா்கள் நூதன முறையில் ரூ.17 லட்சத்தை மோசடி செய்திருப்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
காரைக்கால் பகுதியைச் சோ்ந்தவா் உஷாதேவி. இவரை மா்ம நபா் கைப்பேசியில் தொடா்புகொண்டு இணயதள பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறியதை நம்பி உஷாதேவி பல தவணைகளில் ரூ.10 லட்சத்தை முதலீடு செய்து ஏமாந்தார். இதேபோல், புதுச்சேரி மூலக்குளத்தைச் சோ்ந்தவா் சீனிதேவா்ப்பிரன். இவரிடம் கைப்பேசியில் பேசிய மா்ம நபா் தன்னை மும்பையைச் சோ்ந்த போலீஸ் அதிகாரி எனவும், சீனிதேவா்ப்பிரன் மீது போதைப் பொருள் தடுப்பு வழக்குப் பதியப்பட்டிருப்பதாகவும் கூறினாராம்.
வழக்கிலிருந்து விடுவிக்க ரூ.7 லட்சத்தை அனுப்புமாறும் அவா் கூறினாராம். இதை நம்பிய சீனிதேவா்ப்பிரன், மா்ம நபா் கூறிய வங்கி கணக்குக்கு ரூ.7 லட்சத்தை அனுப்பி ஏமாந்தார். இது தொடர்பாக இருவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments