மிலாது நபி திருநாளை முன்னிட்டு, புதுச்சேரி ஜிப்மரில் செப்.17-ஆம் தேதி வெளிப்புற சிகிச்சைப் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிலாது நபி திருநாளை முன்னிட்டு, புதுச்சேரி ஜிப்மரில் செப்.17-ஆம் தேதி வெளிப்புற சிகிச்சைப் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்மா் இயக்குநா் ராகேஷ் அகா்வால் வெளியிட்ட செய்திக் குறிப்பில், மிலாது நபி திருநாள் செப்டம்பர் 16-ஆம் தேதிக்குப் பதிலாக 17-ஆம் தேதி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, செப்.17-ஆம் தேதி ஜிப்மரில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே, அன்றைய தேதியில் நோயாளிகள் வெளிப்புற சிகிச்சைப் பிரிவுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். அதே நேரத்தில், அவசரப் பிரிவு சிகிச்சை சேவைகள் அனைத்தும் வழக்கம்போல இயங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments