Breaking News

புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு, மயிலாடுதுறை அத்திவரதர் எனப்படும் 16 அடி உயர அத்தி மரத்தால் ஆன கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்.


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சோழன் பேட்டை ஊராட்சியில் கோழிகுத்தி கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வானமுட்டி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. பிப்பல மகரிஷியால் வழிபாடு செய்யப்பட்ட இந்த ஆலயத்தில் 16 அடி உயரத்தில் அத்தி மரத்தால் ஆன வரதராஜப் பெருமாள் காட்சியளிக்கிறார்.  இன்றும் பெருமாள் திருவுருவம் அத்தி மர வேருக்கும் மேலாக அமைந்துள்ளது. இதனால் மயிலாடுதுறையின் அத்திவரதர் என்று பெருமாள் அழைக்கப்படுகிறார். 

மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்து கல்வெட்டுகள் காணப்படும் இந்த ஆலயத்தில் புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாள் நரசிம்மர் ஆஞ்சநேயர் சந்தான கிருஷ்ணன் ஆகியோரை வழிபாடு செய்தனர் பிப்பல மகரிஷி சனிதோஷ கவசம் இந்த ஆலயத்தில் இயற்றியதால் சனி தோஷ பரிகாரத்திற்கு சிறந்த ஆலயம் என்பதால் சனிக்கிழமையை முன்னிட்டு திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

No comments

Copying is disabled on this page!