திருவிடைக்கழி 1500 ஆண்டுகள் பழமையான மிகவும் பிரசித்தி பெற்ற அறுபடை வீடுகளுக்கு இணையான முருகன் கோவில் கும்பாபிஷேகம் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்.
இந்து சமய அறநிலை துறைக்கு உட்பட்ட 1500 ஆண்டுகள் பழமையான முருகப்பெருமானும் சிவபெருமானும் ஒன்றே என்ற அமைப்பில் அமைந்த ஒரே திருத்தலம் என்ற சிறப்புடையது முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இணையான மற்றும் பல்வேறு தனி சிறப்புகள் கொண்ட இக்கோவிலுக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர் பங்குனி உத்திரம் தைப்பூசம் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர்.
இக்கோவிலுக்கு கடந்த 2003ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன திருப்பணிகள் முடிவடைந்து பூர்வாங்க பூஜைகள் தொடங்கப்பட்டு கடந்த 12ஆம் தேதி முதல் யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் இன்று ஆறு கால யாக பூஜைகள் நிறைவு பெற்று பூர்ணாகதி மகா தீபாராதனை உடன் கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்து கோபுர கலசங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க மேல வாத்தியங்கள் இசைக்க புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் மயிலாடுதுறை எம்பி சுதா பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கலந்து கொண்டு தரிசனம் மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சிறப்பு தரிசனம் செய்து வழிபாடு செய்தனர் கும்பாபிஷேகத்தை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது கும்பாபிஷேகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.
No comments