வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் நடப்பு நிதி ஆண்டில் 15 ஆயிரத்து 500 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, - ராதாகிருஷ்ணன்.
தமிழ்நாட்டில் வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் நடப்பு நிதி ஆண்டில் 15 ஆயிரத்து 500 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, மழை பெய்து வரும் போது நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து உயர்த்த மத்திய அரசிற்கு கோரிக்கை வைக்கப்படும், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆய்வு செய்த கூட்டுறவு,உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று வருகை புரிந்த கூட்டுறவு,உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், நாங்கூர், ஆக்கூர் ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குறுவை நெல் கொள்முதல் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து ஆக்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஆய்வு செய்தார், ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17% ஈரப்பதத்தை உயர்த்தி தரும்படி விவசாயிகள் கோரிக்கை . தற்போது திடீர் திடீரென்று மழை பெய்யும் பொழுது விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நெல் கொள்முதல் செய்யும் பொழுது விவசாயிகள் மற்றும் ஊழியர்கள் பாதிக்கப்படாத வண்ணம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போது அவர் கேட்டுக்கொண்டார். கூட்டுறவுத்துறை மூலம் நடப்பு நிதியாண்டில் 15 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வேளாண் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், வருமான வரித்துறை சோதனை மூலம் வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூடப்படுவதாக ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தி தவறானது என்றும், நான்கு கூட்டுறவு சங்கங்களுக்கு மட்டும் வருமானவரித்துறை நோட்டீஸ் வழங்கி உள்ளதாகவும் அதற்கான மேல் நடவடிக்கையை குறித்து அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் அப்போது ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
No comments