Breaking News

வில்லியனூர் ஸ்ரீ கோகிலாம்பிகை சமேத ஸ்ரீ திருக்காமீஸ்வரர் ஆலய மாடவீதியை பௌர்ணமி விழா குழு, மற்றும் இளைஞர் குழு 122 வது மாதமாக வலம் வந்து தரிசனம் செய்தனர்.


வில்லியனூர் பகுதியில் ஸ்ரீ கோகிலாம்பிகை சமேத ஸ்ரீ திருக்காமீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பௌர்ணமி நாளில் மாடவீதியை  பௌர்ணமி விழா குழுவினர் 122 வது மாதமாக வலம் வந்து தரிசனம் செய்தனர். ஆடி மாத பௌர்ணமியை   முன்னிட்டு  ஆலயத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்திற்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் இதனைத் தொடர்ந்து பௌர்ணமி விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பௌர்ணமி விழா குழுவினர் செய்திருந்தனர்.

No comments

Copying is disabled on this page!