Breaking News

திண்டிவனம் அருகே மனைவி கண்முன்னே டிப்பர் லாரியில் சிக்கி கணவன் மற்றும் 10 மாத பெண் குழந்தை பலி; லாரியை முற்றுகையிட்டு ஊர் பொதுமக்கள் போராட்டம்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மேல் சிவிரி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் வயசு (28) எலெக்ட்ரிசியனாக வேலை செய்து வருகிறார்.இவர் நேற்று காலை தனது மனைவி தீபலட்சுமி (22), மற்றும் பத்து மாத பெண் குழந்தை தனுஸ்ரீ ஆகியோருடன் மேல் சிவிரியிலிருந்து வெள்ளிமேடு பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். 

அப்பொழுது அங்கு சாலை அமைக்கும் பணிக்காக லோடு ஏற்றி செல்ல டிப்பர் லாரியானது எதிர் திசையில் வேகமாக வந்து கொண்டிருந்தது  எதிர்பாராத விதமாக லாரியானது முத்துக்குமார் வந்த இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது. இந்த விபத்தில் முத்துக்குமார் மற்றும் அவரது 10 மாத குழந்தையும் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உடல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 


முத்துக்குமாரின் மனைவி தீபலட்சுமிக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் இதனை தொடர்ந்து முத்துக்குமாரின் உறவினர்கள் லாரியை கல்லால் தாக்கி கண்ணாடியை சேதப்படுத்தி இருவரின் உடலையும் சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வெள்ளிமேடுபேட்டை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து லாரியை காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்து இருவரின் உடலையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Copying is disabled on this page!