தூத்துக்குடி ரைபிள் கிளப் சார்பில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பயிற்சி உள்ளரங்கு எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி ரைபிள் கிளப் சார்பில் 10 மீட்டர் வரை துப்பாக்கி சுடும் பயிற்சி செய்யும் நவீன வசதிகளுடன் கூடிய உள்ளரங்கம் தூத்துக்குடி ஏபிசி கல்லூரி பின்புறம் உள்ள சோட்டையன்தோப்பு ரோட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா நடந்தது. இதில், மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பயிற்சி அரங்கை திறந்து வைத்தார். முன்னதாக, எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.
இந்த துப்பாக்கி சுடுதளம் பயிற்சி மையத்தில் 150 ஆண் உறுப்பினர்களும், 22 பெண் உறுப்பினர்களும், 45 கல்லூரி மாணவர்களும் பதிவு பெற்று முறையாக பயிற்சி பெற்று வருகின்றனர். உலகளவில் தனது திறமையை வளர்த்து கொள்வதற்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் பங்கெடுக்க விரும்புபவர்கள் உறுப்பினர்களாகி பயிற்சி மேற்கொள்ளலாம்.
திறப்பு விழாவில் ரைபில் கிளப் தலைவர் ஜெகதீசராஜா, செயலாளர் மேத்யூ, செயற்குழு உறுப்பினர்கள் பேட்டர்சன், ஜோ பிரகாஷ், விஜயகுமார், சுரேஷ்ராஜா, ராஜன், ஜெயகிருஷ்ணன் மற்றும் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ், விஸ்வநாதராஜா, டேவிட் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments