Breaking News

உழவர்கரை தொகுதிக்குட்பட்ட ஜெ.ஜெ நகர் ஸ்ரீ ஜெகதாம்பாள் ஆலய கும்பாபிஷேக பணிக்காக, முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் பொதுமக்கள் முன்னிலையில் கோவில் நிர்வாகிகளிடம் ரூ.1 லட்சம் நிதி வழங்கினார்.


உழவர்கரை தொகுதிக்குட்பட்ட ஜெ.ஜெ நகர் ஸ்ரீ ஜெகதாம்பாள் ஆலய கும்பாபிஷேக பணிக்காக, முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம்  பொதுமக்கள் முன்னிலையில் கோவில் நிர்வாகிகளிடம் ரூ.1 லட்சம் நிதி வழங்கினார்.

புதுச்சேரி உழவர்கரை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பன்னீர்செல்வம்,தொகுதி வளர்ச்சி பணிகள் மற்றும் மக்கள் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, புதுநகர் பகுதியில் விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில், ஆளுங்கட்சியில் இருந்தாலும் அப்பகுதி மக்களுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்டதுடன், உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனிடையே, உழவர்கரை தொகுதிக்குட்பட்ட ஜெ.ஜெ நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெகதாம்பாள் ஆலய கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில், முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் தனது சொந்த நிதியில் இருந்து கோவில் திருப்பணிக்காக நேற்று மாலை ரூபாய் ஒரு லட்சம் நன்கொடையாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உழவர்கரை தொகுதி என்.ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள், ஜெ.ஜெ நகர் முக்கிய நிர்வாகிகள், கோவில் அறங்காவல் குழுவினர் உட்பட அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

உழவர்கரை தொகுதியில் முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் தீவிரமாக மக்கள் பணியில் செயல்பட்டு வருவது என்.ஆர் காங்கிரஸாரிடையே எழுச்சியையும், பொதுமக்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது.

No comments

Copying is disabled on this page!