ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகளின் உற்பத்திகளை அதிகரிக்க 1.50 லட்சம் பல்வேறு வகையான மீன் குஞ்சுகள் விடப்பட்டன.
தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் பிரதம மந்திரி மீன்வளம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காவிரி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சிகளை இருப்பு செய்து உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் மீன் வகை குஞ்சுகள் விடும் நிகழ்விற்கு தருமபுரி மீன்வள துணை இயக்குநர் சுப்ரமணியன், மீன்வள உதவி இயக்குனர் கோகுலரமணன் ஆகியோர் தலைமை வகித்தார்.
இதில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி முன்னிலை வகித்து ஒகேனக்கல் முதலைப் பண்ணை பகுதியில் உள்ள மீன்வளத்துறை அலுவலகம் அருகே காவிரி ஆற்றில் நாட்டின வகை மீன் குஞ்சுகளான கட்லா, ரோகு, மிர்கால் உள்ளிட்ட வகையிலான 1.50 லட்சம் மீன் குஞ்சுகளை காவிரி ஆற்றில் உற்பத்திக்காக விட்டனர்.
இந்த நிகழ்வில் ஒகேனக்கல் மீன்வள ஆய்வாளர் வேலுச்சாமி மீன்வளத்துறை மேற்பார்வையாளர்கள் குமரவேல் மகேந்திரன் மீன் வள பாதுகாவலர் உதவியாளர்கள் ஜீவா, லட்சுமணன், மாதேஷ், சக்திவேல், நவீன், அருண் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், பஞ்சாயத்து செயலாளர், நீர்வளத்துறை அலுவலர்கள் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வட்டார வளர்ச்சித்துறை அலுவலர்கள் பென்னாகரம் மீனவர் நல சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
No comments