Breaking News

ஸ்ரீமுஷ்ணத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆதித்யா செந்தில் குமார் இன்று திடீர் ஆய்வு.


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட சுமார் 41 ஊராட்சிகளில் முதலமைச்சர் ஸ்டாலின்  மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் இன்று மனு நீதி நாள் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆதித்ய செந்தில் குமார்  தலைமையில் நடைபெற்றது. 

இன்றுகாலை சுமார் 10 மணி அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆதித்யா செந்தில் குமார் குமார குடி பகுதியை வந்து அடைந்தார் முன்னதாக கானூர் கிராமத்தில் ரேஷன் கடையை ஆய்வு செய்தார் பொதுமக்களுக்கு ரேஷன் கடையில் இருந்து பொது மக்களுக்கு சரியான முறையில் விநியோகம் செய்யப்படுகிறதா என ஆய்வு செய்த நிலையில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து கானூர் துவக்கப் பள்ளியில் ஆய்வு செய்து மாணவர்கள் வருகை பதிவேடு கல்வி கற்றுத் தரும் முறை மற்றும் மாணவர்களிடையே சில கேள்விகள் கேட்டறிந்தார் பின்னர் கூடையாத்தூர் கிராமத்தில் 100 நாள் வேலையை பார்வையிட்டார் ஸ்ரீ நெடுஞ்சேரி துவக்கப்பள்ளி மற்றும் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் நாச்சியார் பட்டையில் மகளிர் சுய உதவி குழு மூலம் தொழில் செய்வதற்கு மகளிர் குழுக்கள் சுமார் பத்து லட்சம் நிதி உதவி பெற்ற நிலையில் அந்த பேக்கரிக்கு சென்ற ஆட்சியர் கடையை பார்வையிட்டார்.

அதோடு நகரப்படி, ஆதிவராக நல்லூர் ஆகிய ஊராட்சிகளை பார்வையிட்டார் உடன் டிஎஸ்பி ரூபன் குமார் வட்டாட்சியர் சேகர் ஆய்வாளர் வீரசேகரன் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சிவகுமார் மற்றும் பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!