செம்பனார்கோவிலில் திமுக சார்பில் முப்பெரும் விழா மற்றும் மாபெரும் பட்டிமன்றம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் ஏற்பாட்டில் முப்பெரும் விழா மற்றும் மாபெரும் பட்டிமன்றம் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் கலைஞர், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகழுக்கு பெரிதும் காரணமாக இருப்பது மக்கள் பணியா? இயக்கப் பணியா? என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ தலைமை வகித்தார்.
இதில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் நடுவராக பங்கேற்றார். இந்த பட்டிமன்றத்தை திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு கேட்டு ரசித்தனர். முன்னதாக கீழையூர் ஊராட்சியில், மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ முப்பது அடி உயர திமுக கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, நெடுவாசல் ஊராட்சியை சேர்ந்த 50-க்கு மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். பட்டிமன்ற நிகழ்ச்சியின் முடிவில் மூத்த திமுக முன்னோடிகள் 51 பேருக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.
No comments