மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 388 மனுக்கள் பெறப்பட்டன.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகைபுரிந்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனுக்களை அளித்தனர்.
இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், கோரி 73 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 57 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகைகோரி 38 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 41 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 35 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 31 மனுக்களும், நிலஅபகரிப்பு தொடர்பாக 43 மனுக்களும் கலைஞர் உரிமைத்தொகை வேண்டி 18 மனுக்களும் தொழிற்கடன் வழங்க கோரி 36 மனுக்களும் கலைஞர் கனவு இல்லம் வேண்டி 16 மொத்தம் 388 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
பின்னர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மனவளர்ச்சி குன்றிய 5 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளுக்கான அடையாள அட்டைகளையும், மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து சுய தொழில் தொடங்க ஏதுவாக 2 பயனாளிகளுக்கு தலா ரூ.30 ஆயிரத்திற்கான காசோலையையும் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வழங்கினார்.
இக்கூட்டத்தில், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து வடிவேல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) சந்தான கிருஷ்ணன் மாவட்ட வழங்கல் அலுவலர் பானுகோபன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ரவி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுரேஷ் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments