Breaking News

வாட்சாப்பில் பாலியல் தொழில் மற்றும் பெண்களை பாலியல் தொழில் ஈடுபடுத்துவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.


உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் பகுதிகளில் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் பாலியல் தொழில் நடந்து வருவதை கண்டித்தும் சிறுமிகள் மற்றும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தியும் பாலியல் தொழிலுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸப் குழுக்களை முழுமையாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் மாணவர்கள் என ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி சங்கராபுரம் திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் சிலர் whatsapp குழுக்களை அமைத்து அதில் இளம்பெண்கள் மாணவிகள் பலரது புகைப்படங்களை பரவச் செய்து அவர்களின் வறுமையை பயன்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் இது தொடர்பான புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பாலியல் தொழிலில் ஈடுபட்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்த பொழுது தமிழக அளவில் நெட்வொர்க் அமைத்து whatsapp குழுக்கள் மூலம் பாலியல் தொழில் அதிக அளவு நடந்து வந்தது தெரிய வந்தது இந்த சம்பவம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் whatsapp குழுக்களில் உள்ளவர்களின் எண்களை கொண்டு போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் அதில் காவல் துறையை சேர்ந்தவர்களும் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் கட்சியினரும் சிக்கி உள்ளனர் இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை அமைத்து பரவி வரும் பாலியல் வக்கிரமங்களை தடுத்திட தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸாப் குழுக்களை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மாணவர் மற்றும் வாலிபர் சங்கத்தினருடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மாதர் சங்க மாநில செயலாளர் சங்கவி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் வாலிப சங்க மாநில துணைச் செயலாளர் செல்வராஜ் மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் சின்ராசு உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாலியல் தொழிலில் ஈடுபடும் குற்றவாளிகளை தமிழக அரசு கண்டிக்க வேண்டும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், பாலியல் தொழிலுக்காக உருவாக்கப்பட்ட whatsapp குழுக்களை தடை செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

No comments

Copying is disabled on this page!