கொடுமுடி அருகே, கயிறு தயாரிக்கும் நிறுவனத்திற்கு தேங்காய் நார் பாரம் ஏற்றி வந்த வாகனத்தில் மின்கம்பி உரசியதில் வாகனம் எரிந்து சேதமடைந்தது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே, கயிறு தயாரிக்கும் நிறுவனத்திற்கு தேங்காய் நார் பாரம் ஏற்றி வந்த வாகனத்தில் மின்கம்பி உரசியதில் வாகனம் எரிந்து சேதமடைந்தது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் இருந்து கவியரசன் என்பவருக்கு சொந்தமான டெம்போ.வில் தேங்காய் நார் ஏற்றி கொண்டு ஆறுமுகம் என்பவர் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். கொடுமுடி அருகே தளுவம்பாளையம் கிராம சாலையில் சென்ற பொது தாழ்வாக இருந்த மின்கம்பி தேங்காய் நாரில் உரசியது. இதனால் தேங்காய் நார் மளமளவென தீ பற்றி எரிந்தது. உடனடியாக ஓட்டுனர் வண்டியை நிறுத்தி விட்டு வெளியே வந்ததால் உயிர் தப்பினார்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். தகவல் அறிந்து வந்ந தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். எனினும் தேங்காய் நார் மற்றும் வாகனத்தின் ஒரு்பகுதி எரிந்து சேதமடைந்த்து. இது குறித்து கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments