மதசார்பின்மைக்கு ஊறுவிளையாத வகையில் தமிழக அரசு கவனமாக இருக்க வேண்டும், முத்தமிழ் மாநாட்டில் கல்வி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து திருமாவளவன் விமர்சனம்.
ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டில் திருமாவளவனே முதல்வராக வேண்டுமென்று பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன். ஜாதிய இறுக்கம் தமிழகம் மட்டுமின்றி, அகில இந்திய அளவிலும் உள்ளது. தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜகவில் வயது மூப்பு, கட்சியில் பங்களிப்பு ஆகிய அடிப்படையில் சிலர் கட்சி பிரதிநிதிகளாக, முதல்வர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். மாநில அளவில் அம்பேத்கர் கொள்கைகள், ஜாதி ஒழிப்பை பேசுகிற கட்சிகளில் இருந்து ஒருவர் முதல்வராவது கடினம்.
அரசியல் களத்தில் ஜாதிய இறுக்கம் வெகுவாக இறுகிபோய் கிடக்கிறது. அதனை எனது பேச்சில் இயல்பாக குறிப்பிட்டேன். உள்ளோக்கத்துடனும், திமுக அரசுக்கு எதிராக பேசியதாக பலர் திரித்து பேசுகிறார்கள். திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது. கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியிட்டது மத்திய, மாநில அரசு இணைந்து நடத்திய அரசு விழா கூட்டணிக்கு சம்பந்தமில்லாதது. மீனவர்கள் கைது செய்யப்படுவது, உடமைகள் சேதப்படுத்தப்படுவது நீடிக்கிறது. காங்கிரஸ் ஆட்சி மாறினால் ஈழப்பிரச்னை, தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு கிட்டும் என்று பலர் கூறினர். ஆனால், ஆட்சி மாறி 10 ஆண்டுகள் ஆனபிறகும் தமிழக மீனவர்கள், ஈழத்தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை.
தமிழ்நாட்டு மீனவர்கள் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிபடுத்த வேண்டும். முத்தமிழ் மாநாட்டில் கல்வி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் மதசார்பின்மைக்கு ஊறுவிளையாத வகையில் தமிழக அரசு கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
No comments