மணலூர்பேட்டை அரசு பள்ளி SMC பொறுப்பாளர்கள் தேர்வு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை பேரூராட்சி அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று பள்ளி மேலாண்மை குழுவின் மறு கட்டமைப்பு தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து பெற்றோர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
சிவா அவர்கள் மேலாண்மை குழு தலைவராகவும் சேகர் அவர்கள் துணைத் தலைவராகவும் மற்றும் 14 பேர் அடங்கிய குழு நிர்வாக உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டு தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்தனர்.
No comments