கிழவிகுளம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் 170 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பள்ளி பை வழங்கும் திட்டம் நிகழ்ச்சி.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கிழவிகுளம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் வைத்து இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நேரு யுவகேந்திரா மற்றும் ஸ்மைல் பவுண்டேஷன் இணைந்து அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அமெரிக்கா ஆனந்த் அவர்களின் நிதி உதவியுடன் 170 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பள்ளி பை வழங்கும் திட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட இளைஞர் அலுவலர் ஞானச்சந்திரன் சமூக சுகாதார அலுவலர் ராஜ்குமார் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவாளி பள்ளி தலைமை ஆசிரியர் பழனியப்பன் போன்றோர் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் மாணவ மாணவிகள் அனைவருக்கும் பேக் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை பிரமிளாதேவி சிறப்பாக செய்திருந்தார் பெனடிக் கிங்ஸ்லி நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
No comments