இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் மற்ற பள்ளி நல்ல சமாரியன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கன்சிகிச்சை முகாம்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு 28.8.2024 இன்று இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் மற்றப்பள்ளி நல்ல சமாரியன் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம் பத்தலப்பல்லி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்றது இந்த முகாமில் 200 க்கும் மேற்பட்டோர் கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டனர்
மற்றப்பல்லி நல்ல சமாரியன் கண் மருத்துவமனை மருத்துவர் பிரசாந்த், நமச்சிவாயம் ஆகியோர் கொண்ட குழுவினர் பரிசோதனை மேற்கொண்டதில் 41 நபர்கள் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வாகி மருத்துவ சிற்றுண்டில் அழைத்துச் சென்றனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டின் செயலாளர் பொன். வள்ளுவன் ஏற்பாடு செய்திருந்தார் இம்முகாமில் பேர்ணாம்பட்டு நகரத்தில் சுற்றியுள்ள பங்களா மேடு, கமலாபுரம், குண்டலபள்ளி, கொண்டமல்லி, எருக்கம்பட், சாரங்கள் மலை கிராம மக்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
No comments