சமூக விரோதிகளின் பிடியில் குடியாத்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர்கள் கடும் விரக்தி.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூகவிரோதிகளின் குற்ற செயல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, இப்பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர், தற்போது இப்பள்ளியில் விடுமுறை நாட்களில் மற்றும் பள்ளி வேலை நாட்களில் இரவு நேரங்களில் மது, மாது போன்ற குற்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல அச்சமடைகிறார்கள் எனவே இந்த சமூக விரோத செயலில் ஈடுபடுவோர் மீது காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் துரித நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்களும் , சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
- குடியாத்தம் தாலுக் செய்தியாளர் A. தென் காந்தி
No comments