மணமக்களுக்கு ஜாதி சடங்கு சம்பிரதாயங்களின்றி திருமணத்தை நடத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.
மயிலாடுதுறை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இஸ்லாமியர்கள் இணையும் விழாவில் அடுத்த மாதம் திருமண தேதி நிச்சயிக்கப்பட்டிருந்த மணமக்களுக்கு ஜாதி சடங்கு சம்பிரதாயங்களின்றி திருமணத்தை நடத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி நடத்தி வைத்தார். கட்சி தொண்டர்களின் ஆராவரத்திற்கிடையே இணைஏற்பு கண்ட மணமக்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் நீடூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் புதிதாக இஸ்லாமிய உறுப்பினர்கள் இணையும் விழா நடைபெற்றது. இதில் புதிதாக கட்சியில் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களுக்கு தலைவர் திருமாவளவன் எம்பி கட்சி துண்டு அணிவித்து வரவேற்று கட்சியில் இணைத்தார்.
இந்த விழாவின் முத்தாய்ப்பாக இளங்சிறுத்தைகள் எழுச்சி பாசறை ஒன்றிய செயலாளர் உத்திரங்குடியை சேர்ந்த தீபன்ராஜ் என்பவருக்கும் கடலங்குடியை சேர்ந்த நந்தினி என்பவருக்கும் அடுத்த மாதம் 15ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இன்று தலைவர் திருமாவளவன் தலைமையில் இணைஏற்பு விழா நடத்த வேண்டும் என்று மணமக்கள் கேட்டுகொண்டதற்கு இணங்க நவமி தினத்தில் திருமண சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றாமல் மணமக்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்.
தலைவர் திருமாவளவன் திருகரங்களால் மாங்கல்யம் எடுத்து கொடுத்து மணமக்களுக்கு இணை ஏற்பு விழாவை நடத்தி வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவித்துக் கொண்டார் இதில் குடும்பத்தில் உள்ள அனைவரும் மிக்க மகிழ்ச்சியோடு இந்த திருமண விழாவை ஏற்றுக் கொண்டனர். கட்சி தொண்டர்கள் ஆராவாரத்திற்கிடையே மேளதாள வாத்தியங்கள் இன்றி திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
No comments