கோவை நகை உற்பத்தியாளர் சங்கத்தின் இளைஞர்கள் அறிமுகம் விழா நடைபெற்றது.
கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் அடுத்து உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கோவை நகை உற்பத்தியாளர் சங்கத்தின் இளைஞர்கள் அறிமுக விழா நடைபெற்றது.இந்த விழாவில் இளைஞர்களுக்காக லோகோ அறிமுகம் செய்யப்பட்டது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றி விழாவை சிறப்பித்தார்.
மேலும் விழாவில் ரூட்ஸ் இண்டஸ்ட்ரியல் இயக்குனர் கவிதாசன்,கோவை நகை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம், செயலாளர் சுரேஷ் குமார், பொருளாளர் வெங்கடேஷ் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள், நகை உற்பத்தியாளர்கள் மற்றும் இளைஞர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து விழாவில் கோவை எம்பி கணபதி ராஜ்குமாருக்கு சங்கம் சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் இளைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இளைஞர்களை தொழிலில் ஊக்குவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சியானது நடைபெற்றது.
மேலும் அவர்கள் வாழ்வில் சிறந்து விளங்கிட தொழில்களில் கவனம் செலுத்தி நாளில் தலைமுறையை கையாள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.இளைஞர்கள் உற்சாகமாக விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments