கீழ்பவானி பிரதான கால்வாயில், குமுளி பாலத்தில் அடைப்பு; சம்பவ இடத்தில் அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
பெருந்துறை அருகே கருக்கன்காட்டு வலசு பகுதியில், கீழ்பவானி கால்வாயின் மேல்பகுதியில் கால்வாயின் குறுக்கே மழைநீர் வடிகால் ஓடை செல்வதால், சுமார் 30 அடி நீளத்திற்கு குமுளி பாலத்தின் வழியாக கால்வாய் தண்ணீர் கடந்து செல்கிறது. கால்வாயில் அடித்து வரப்பட்ட மரம் மற்றும் குப்பைகளால் இந்த குமுளி பாலத்தின் ஒரு பகுதியில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கியது. கால்வாயின் பாதுகாப்பு கருதி, இதற்கு இருக்க கூடிய அனைத்து கிளை பாசன கால்வாய்களிலும் கூடுதலான தண்ணீர் திறக்கப்பட்டது.
எச்சரிக்கையாக தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டதுடன், நீர்வளத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பொக்லைன் மூலம் அடைப்பை சீரமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பவ பகுதியை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். பாலத்தின் மையப்பகுதியில் அடைப்பு ஏற்பட்டிருப்பதால் அதனை வெளியேற்ற பலமணி நேரமாக நீர்வளத்துறையினர் போராடி வருகின்றனர்.
No comments