வாணியம்பாடியில் உலக அளவிலான சிலம்பம் மற்றும் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் உற்சாக வரவேற்பு.
கோவாவில் கடந்த 25ம் தேதி உலக அளவிலான சிலம்பம் மற்றும் கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் இலங்கை, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா போன்ற 9 நாடுகள் பங்கேற்று விளையாடின.
இதில் இந்தியா சார்பாக, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாணியம்பாடி அடுத்த சின்ன பள்ளிகுப்பம் இலங்கை அகதிகள் முகாம் , மலையம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள் அரசு பள்ளிகளில் இருந்து பயிற்சியாளர் சுரேஷ் தலைமையில் 25க்கும் மேற்பட்ட ஜூனியர் ,சீனியர், சப் - ஜூனியர் பிரிவுகளில் மாணவர்கள் கலந்து கொண்டு முதலிடத்தில் பிடித்து மிகப்பெரிய சாதனை படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு வந்த விளையாட்டு வீரர்களுக்கு சால்வை, மாலை, இனிப்புகள், வழங்கியும், கலைகளை கற்றுத் கொடுத்த குருக்களிடமிருந்து ஆசி பெற்றும் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடி மேல தாளத்துடன், உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- பு.லோகேஷ் திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர்.
No comments