ஊத்தங்கரை ஒன்றியம் கல்லாவி ஊராட்சியில் குப்பை மேடு: மக்கள் அவதி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் கல்லாவி ஊராட்சியில், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொறுப்புடைய ஊராட்சி நிர்வாகமே சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்டி மிகப்பெரிய அவலத்தை ஏற்படுத்தியுள்ளது, ஊராட்சி துப்புரவு பணியாளர்கள், குப்பைகளை தரம் பிரிக்காமல் பிளாஸ்டிக் மற்றும் திடக்கழிவுகளை ஒன்றாகக் கொட்டுவதால், சாலைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. துர்நாற்றம் மிகுந்து, நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊராட்சி நிர்வாகம், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாகக் கொட்ட குழிகள் அமைக்க வேண்டும் என்ற விதி இருந்தும், அதை மீறி தொடர்ந்து சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்டுவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கும். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாத்து, நோய் தொற்று பரவலைத் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments