உளுந்தூர்பேட்டை அருகே திருவெண்ணைநல்லூர் கிழக்கு ஒன்றியத்தில் பல்வேறு கட்சியில் இருந்து திமுகவில் இணைந்தனர்.
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி திருவெண்ணைநல்லூர் கிழக்கு ஒன்றியம் காந்தலவாடியை சேர்ந்த பாமக மாவட்ட துணை தலைவர் மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து பாலா என்கிற பிரகாஷ் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சியிலிருந்து உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக அவைத் தலைவரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக உறுப்பினர் மணிகண்ணன் அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் பிரியா பாண்டியன்,ஒன்றிய கவுன்சிலர் இண்பவள்ளி அய்யனார், முன்னாள் கவுன்சிலர் தீர்த்தமலை, பன்னீர்செல்வம், குணா ரெட்டியார் முன்னாள், மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன், பெரும்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மருதுபாண்டி, முன்னாள் கவுன்சிலர் முருகானந்தம், தகவல் தொழில்நுட்ப அணி மணிகண்டன், ஆவின் இயக்குனர் ஆறுமுகம், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
No comments