காரைக்குடியில் அதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை வழங்கிய பி.ஆர்.செந்தில்நாதன் MLA.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தேவகோட்டை, கண்ணங்குடி, ஒன்றிய பகுதிகளில் அதிமுக சார்பாக புதிய உறுப்பினர் உரிமை அடையாள அட்டையை அதிமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.செந்தில்நாதன், நிர்வாகிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தேவகோட்டை ஒன்றிய பெருந்தலைவர் பிர்லா கணேசன், ஒன்றிய செயலாளர்கள் தசரதன் முருகன், பெரியசாமி, சரவணன், வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் பாரதி கண்ணன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை துணைச் செயலாளர் பிரபு, சருகணி ஊராட்சி மன்றத் தலைவர் ஆரோக்கியராஜ், மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர்கள் பிரான்சிஸ், செந்தில்நாதன், குமரேசன், மாவட்ட விவசாய அணி தலைவர் பிருத்திவிராஜ், அந்தோணி ரமேஷ், பிரேம், ராமநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
No comments