பங்களாதேஷ் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்.
தேனி தெற்கு மாவட்டம், சின்னமனூர் நகரில், இந்துமுன்னணி பேரியிக்கத்தின் சார்பாக பங்களாதேஷ் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட தலைவர் V.சுந்தர் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் R.பாலமுருகன் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகர துணைத்தலைவர் சுருளிமுத்து வரவேற்புறையாற்றினர். சிறப்பு பேச்சாளர்கள் மாநில பேச்சாளர் R.S.ராமகிருஷ்ணன், கோட்ட செயலாளர் கோம்பை. கணேசன் சிறப்புறையாற்றினர்கள்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கணேஷ்குமார், HYF ஒருங்கிணைப்பாளர் ராம்.செல்வா, செயற்குழு உறுப்பினர் பாண்டியன், நகர பொறுப்பாளர்கள் ரெங்கசாமி, கூடலூர் R.P.ஜெகன் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நகர செயலாளர் ரெங்கநாதன் நன்றியுரை நிகழ்த்தினர். பங்களாதேஷ் இந்துக்களுக்கா நீதி கோரி மத்திய அரசை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பபட்டது.
- தேனி மாவட்ட செய்தியாளர்- கிஷோர்குமார்
No comments