கோவில்பட்டியில் கண் தான விழிப்புணர்வு பேரணி - கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கண் தான வாரத்தினை முன்னிட்டு அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் கோவில்பட்டி கண்தானம் இயக்கம் இணைந்து நடத்திய கண்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்தான இயக்க தலைவர் விநாயகம் விநாயகம் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
பயனியர் விடுதி முன்பு இருந்து தொடங்கிய இப் பேரணியை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்மொழி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவ மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர் பயணியர் விடுதி முன்பாக தொடங்கிய இப்பேரணி மார்க்கெட் சாலை வழியாக வந்து ஸ்டேட் பேங்க் முன்பு நிறைவடைந்தது. பேரணியின் போது கண் தானம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியவாறு சென்றனர்.
No comments