Breaking News

புலம்பெயர் தொழிலாளர்கள் e-Shram வலைதளத்தின் மூலம் பதிவு செய்து புதிய மின்னணு ரேசன் கார்டு பெற்றுக் கொள்ளலாம்.


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் e-Shram வலைதளத்தின் மூலம் பதிவு செய்து புதிய மின்னணு ரேசன் கார்டு பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கலெக்டர் இளம்பவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, பிற மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களில், தங்களது சொந்த மாநிலத்தில் மின்னணு ரேசன் கார்டு இல்லாத தொழிலாளர்கள்  e-Shram வலைதளத்தில் பதிவு செய்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் புதிய மின்னணு ரேசன் கார்டினை பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே புதிய மின்னணு கார்டு கோரி விண்ணப்பம் செய்தவர்கள் விண்ணப்பத்தின் நிலையினை இணையதளம் அல்லது சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தினை அணுகி தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

No comments

Copying is disabled on this page!