கோவை மலுமிச்சம்பட்டியில் மக்கள் கோரிக்கைகளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்.
கோவை மாவட்டம் மதுக்கரை தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மலுமிச்சம்பட்டி ஊராட்சி கிளைகள் சார்பில் மக்கள் கோரிக்கைகளுக்காக ஆகஸ்ட் 27 செவ்வாய்க்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் மாலை 5 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் 15 நாட்களுக்கு ஒருமுறை என குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது. இதை முறைப்படுத்தி குடிநீர் வினியோகத்தை சீராக வழங்க வேண்டும். சாக்கடை கால்வாய்கள் சுத்தம் செய்யப்படுவதில்லை. அதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும். இந்திரா நகர் 60 அடி ரோடு பகுதியில் சாக்கடை அமைத்து தர வேண்டும். மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் பொதுக் கழிப்பிடம் இல்லாமல் பெண்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
புதிதாக கழிப்பிடம் அமைத்து தர வேண்டும். பழுதடைந்த சாலைகளுக்கு புதிதாக தார் சாலை அமைத்து தரவும் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரியும் மதுரை வீரன் கோவில் வீதி மக்களுக்கான மயான பாதையில் தெரு விளக்கு வசதி, மயானத்தில் தெருவிளக்கு வசதி. தண்ணீர் வசதி, வெயிட்டிங் செட் அமைத்து மயானத்தை சீராக்கி தர வேண்டும். மலுமிச்சம்பட்டியில் அரசு மருத்துவமனை அமைக்க கோரியும் போக்குவரத்து நிர்வாகம் மலுமிச்சம்பட்டி - போடிபாளையம் வழியாக மதுக்கரைக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
நிகழ்வின் முடிவில் வெள்ளலூர் கிளைகள் சார்பில் கேரள மாநிலம் வயநாடு நிவாரண நிதி தொகை ரூ 12,000 ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாலகுரு, ரங்கநாதன் ஆகியோர் ஒன்றிய செயலாளர் எம்.பஞ்சலிங்கம் அவர்களிடம் வழங்கப்பட்டது.
No comments