திருநள்ளாறு பெண்கள் அரசு மேல்நிலை பள்ளியை வைத்து முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் அரசியல் செய்வதாக பாஜக மாவட்ட பொறுப்பாளர் மீனாட்சி சுந்தரம் குற்றச்சாட்டு.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கட்டிடங்கள் கட்டப்பட்டு 38 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் இப்பள்ளிக்கென புதிய கட்டிடம் கட்ட ரூபாய் 10.5 கோடி செலவில் திட்டமிடப்பட்டு திருநள்ளாறு பகுதியில் புதிய கட்டிடம் கட்டி 90% வேலைகள் முடிந்த நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் பள்ளி திறக்கப்படும் தருவாயில் உள்ளதாகவும் இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் பள்ளியை சென்று பார்த்து இதை வைத்து அரசியல் செய்து வருவதாகவும் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது என்ன செய்தார் எனவும் பாஜக மாவட்ட பொறுப்பாளர் மீனாட்சி சுந்தரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து கல்வித்துறை அமைச்சரிடம் பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இன்னும் ஓரிரு வாரங்களில் பள்ளி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். முன்னதாக புதிய மற்றும் பழைய பள்ளி கட்டிடங்களை பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட பொறுப்பாளர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட தலைவர் முருகதாஸ், திருநள்ளாறு தொகுதி தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
No comments