Breaking News

திருநள்ளாறு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி விவகாரம் வரும் திங்கள் கிழமை அன்று முதல் புதிய கட்டிடத்தில் பள்ளி செயல்படும் என தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.சிவா தகவல்.


காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியில் கடந்த 38 ஆண்டுகளுக்கு மேலாக அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி கட்டிடம் பழுதடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் புதிய பள்ளி கட்டிடம் ரூபாய் 10.5 கோடி செலவில் கட்டப்பட்ட 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. 

தற்போது பள்ளியை புதிய கட்டிடத்திற்கு மாற்ற பொதுமக்கள் தரப்பிலிருந்தும் அரசியல் கட்சிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கைகள் வந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருநள்ளாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.சிவா "திருநள்ளாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூபாய் 10.5 கோடி செலவில் திட்டமிடப்பட்டு பணிகள் 90% நிறைவடைந்து இருப்பதாகவும், அரசு தரப்பில் ஒப்பந்ததாரருக்கு ஒரு கோடியே 38 லட்சம் பணம் கொடுக்க வேண்டி உள்ளதால் பள்ளியின் கட்டிடப் பணிகளில் தேக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் தற்போது பழைய பள்ளியின் நிலை மோசமாக உள்ள காரணத்தால் முதலமைச்சரிடம் பேசி 29 லட்ச ரூபாய் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள தொகையை இன்னும் 15 நாட்களுக்குள் தருவதாக ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். 


இந்நிலையில் பள்ளியை புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதற்கான உத்தரவை கல்வித்துறை இயக்குனர் என்று வெளியிடுவார் எனவும் எனவே வருகிற வியாழன் அல்லது வெள்ளிக்கிழமையில் பொருட்கள் அனைத்தும் பள்ளி புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு வரும் திங்கள்கிழமை முதல் பள்ளி புதிய கட்டிடத்தில் இயங்கும் எனவும் தெரிவித்தார்.

No comments

Copying is disabled on this page!