சீர்காழியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மரத்தான் ஓட்ட போட்டி நடைபெற்றது.
சீர்காழியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு மரத்தான் ஓட்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது புத்தூர் பகுதியில் தொடங்கி சீர்காழி தமிழிசை மூவர் மணி மண்டபம் வரை 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்றது. இதில் சீர்காழி பகுதியை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பங்கேற்று போட்டியினை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், போதைப் பொருளானது சமுதாயத்தை சீரழித்து வருவதாகவும், அதனை முற்றிலுமாக அகற்றுவதற்கு தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும். அதற்கு இந்த மரத்தான் நல்ல ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புவதாகவும், போதைப்பொருள் பழக்கத்தை அனைவரும் அடியோடு வெறுத்து ஒதுக்க வேண்டும். போதைப் பொருளானது அதனை உட்கொள்வர்கள் மட்டுமல்ல அவர்களை சார்ந்து இருப்பவர்களையும் பாதிக்கக்கூடிய ஒன்றாகும். எனவே இந்த போதைப்பொருள் பழக்கத்தை நாம் முற்றிலுமாக விட்டு ஒழிக்க வேண்டும்
சீர்காழி உட்கோட்டத்தை பொறுத்த வரை இங்கு உள்ள சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும், சீர்காழி பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை சரி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சட்ட விரோதமாக யாரேனும் செயல்பட்டால் அவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
No comments