Breaking News

தருமபுரி வனக்கோட்டம் சார்பில் தையல் கலை பயிற்சி பெற்ற மகளிருக்கு களப்பயணம்.

தருமபுரி வனக்கோட்டம், பாலக்கோடு, தீர்த்தமலை, ஒகேனக்கல், பென்னாகரம் ஆகிய வனச்சரகத்திற்குட்பட்ட பழங்குடியின மற்றும் மலைவாழ் கிராமத்தில், தமிழக வனத்துறை சார்பில் சூழல் மேம்பாட்டு குழுவினருக்கான மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிர்களுக்கு தையல் கலை பயிற்சி வழங்கப்பட்டது.


காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டம்-2024 மூலம் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் (JICA) உதவியுடன், தமிழக வனத்துறை சார்பில் தீர்த்தமலை வனச்சரகம் ஆண்டியூர், ஒகேனக்கல் வனச்சரகம் போடூர், பாலக்கோடு வனச் சரகம் குழிப்பட்டி, பென்னாகரம் வனச்சரகம் டேம் கொட்டாய் ஆகிய இடங்களில் மலைவாழ் மற்றும் பழங்குடியின மகளிர்க்கு 45 நாட்கள் தையல் கலை பயிற்சி வழங்கப்பட்டு பயிற்சி நிறைவுற்றது.

இந்த பயிற்சியை கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன் மற்றும் ஸ்ரீ தேவி மகா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைத்து நடத்தியது. இந்த தையல் கலை பயிற்சி நிறைவுற்று, பயிற்சி முடித்த மகளிர்களுக்கு நேரடி களப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. 


பயிற்சி பெற்ற மகளிர்கள் தருமபுரி மாவட்டம் இண்டூரில் அமைந்துள்ள J.R. கார்மெண்ட்ஸ் ஆடை வடிவமைப்பு நிறுவனத்தை பார்வையிட்டனர். இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை கேட்டறிந்தனர். இந்நிகழ்வில் கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன் மற்றும் ஸ்ரீ தேவி மகா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை பொறுப்பாளர்கள்  டி.எஸ். சசிகுமார், தேவகி பரமசிவம், ஆர். முருகேசன், அன்பரசு ராமன், துரை மற்றும் J.R. கார்மெண்ட்ஸ் அலுவலர்கள் கலந்து கொண்டு தையல் கலை பயிற்சி பெற்ற மகளிர்க்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.

No comments

Copying is disabled on this page!