Breaking News

எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசிய பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அதிமுக  தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிவா ஆனந்த் தலைலையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  குறித்து  அவதூறாக  பேசிய பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையை  கண்டிக்கும் வகையில்  சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுகவினர்  திடீரென அண்ணாமலையின் உருவபொம்மையை  எடுத்து  எரிக்க முயன்றனர். எரிக்க முயன்றதை தொடேன்ற்து  போலீசார் அதனை தடுத்து உருவபொம்மையை எடுத்துச் சென்றனர் இதற்கு இடையில் அதிமுக தொழில்நுட்ப பிரிவு தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்பு உருவப் பொம்மையை எரிக்க முயன்ற 20க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர் இதனால் சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகே பரபரப்பான சூழல் ஏற்பட்டது. 

No comments

Copying is disabled on this page!