Breaking News

முதல்வர் என்பவர் ஆல் இந்தியா புரோக்கர், பிரதமர் என்பவர் இன்டர் நேஷனல் புரோக்கர் - சீமான் கடும் விமர்சனம்.


திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக்காடு ஸ்ரீபொங்குசனீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரினசம் செய்வதற்காக இன்று வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, வலிமைவாய்ந்த நமது கடற்படை ராணுவம் யாரை பாதுகாப்பதற்காக நமது கடல் எல்லையில் நிறுத்தப்படுகிறது.  கடல் எல்லையை எவ்வாறு தீர்மானிப்பது. நமது  மீனவர்களை இலங்கை ராணுவம் மீன்பிடி வலைகளை அறுப்பதும், படகுகளை சேதப்படுவத்துவது, மீனவர்களை சிறைபிடிப்பது, மீனவர்கள் சுட்டுகொல்வது போன்றவற்றை இந்திய கடற்படை ஒருதடவையாவது தடுத்து நிறுத்தியுள்ளதா? கேரள நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி செல்லும்போது ஏன் அவர்களை கைது செய்வதில்லை, வலைகளை சேதப்படுத்துவது  இல்லை என சந்தேகத்தை எழுப்பினார். 


முதல்வர் ஸ்டாலினும், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவும் தமிழகத்தில் 10 லட்சம் கோடி முதலீடு வந்துள்ளதாகவும், 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறுவது மிகப்பெரிய பச்சை பொய் என குற்றம்சாட்டிய சீமான் இதுதான் திராவிட மாடல் அரசு என்றார். நாட்டில் நேர்மையாக ஆட்சி நடக்கும்போது, சட்டம் ஒழுங்கு அமைதியாக இருக்கும்போது, நிர்வாகம் சிறப்பாக இருக்கும்போது, ஊழல் லஞ்சம் ஒழிந்து இருக்கு, மனித ஆற்றில் நிரம்பி இருக்கு என முதலீட்டாளர்கள் நம்பும்போது அந்நாட்டை தேடி முதலீட்டாளர்கள் வருவார்கள். 


ஆனால் முதல்வர், பிரதமர் நாடு நாடாக சென்று முதலீட்டாளர்களை அழைக்கிறார்கள்.  இதனை பார்க்கும்போது முதல்வர் என்பவர் ஆல் இந்தியா புரோக்கர், பிரதமர் என்பவர் இன்டர் நேஷனல் புரோக்கர் எனவும் நீங்கள் தரகர்கள் தலைவர்கள் இல்லை என்றார். நடிகர் விஜய் கட்சி கொடியினை வெளியிட்டது குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த சீமான், நாட்டில் ஏகப்பட்ட கொடி சிகப்பு, மஞ்சள் நிறத்தில் உள்ளது.  தம்பி விஜய் புதிதாக கட்சி தொடங்கியுள்ளார்.  


தெரு நாய்கள் எல்லை தெருவரைக்கும் தான். அதில் உள்ள வண்ணங்கள் மற்றும் யானை சின்னம் போன்றவை அனைவருக்கும் பொதுவானது இதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. தமிழக அரசு முதல்வர் கலைஞருக்கு நாணயம் வெளியிட்டது குறித்த கேள்விக்கு அது நாணயம் இல்லை சில்லறை காசு என்றார்.

No comments

Copying is disabled on this page!