புதுச்சேரி மாநில தையல் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் நடத்திய தையல் பயிற்சி பட்டறை. நூற்றுக்கும் மேற்பட்ட தையல் தொழிலாளர்கள் பங்கேற்பு.
புதுச்சேரி மாநில தையல் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் இணைந்து நடத்திய தையல் பயிற்சி பட்டறை இன்று காரைக்காலில் நடைபெற்றது இந்த பயிற்சி பட்டறையில் காரைக்காலைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட தையல் தொழிலாளர்கள் பங்கேற்றனர். இப்ப பயிற்சி பட்டறையில் தென்காசி நமச்சிவாயம், கரூர் பாஷா உள்ளிட்ட சிறந்த தையல் துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு தையல் தொழிலாளர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.
அத்துடன் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப புதிய தொழில்நுட்பம், புதிய வடிவமைப்புகள் குறித்து செயல்முறை விளக்கினர். இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில தையல் தொழிலாளர் சங்க தலைவர் கார்த்திகேயன், செயலாளர் அப்பராஜ், துணைத் தலைவர் சிங்காரவேலு, தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாநில தலைவர் சீதாமலை மாநில பொதுச்செயலாளர் தஞ்சை பாலு உள்ளிட்ட உன்கிட்ட புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு தையல் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
No comments