Breaking News

மத்திய அரசு வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வர வேண்டும் புதுச்சேரி மாநில ஐக்கிய விவசாயிகள் சங்கம் கோரிக்கை.


ஐக்கிய விவசாயிகள் சங்க புதுச்சேரி மாநில நிர்வாகிகள் அறிமுகவிழா மற்றும் புதுச்சேரி மாநில விவசாயிகள்  கருத்தரங்கம் இன்று காரைக்காலில் நடைபெற்றது. இதில் புதுடெல்லியில் ஒன்றறை ஆண்டுகளாக போரட்டாம் நடத்திட அனைத்து மாநில விவசாயிகளையும் ஒன்றிணைத்த  தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜீத் சிங் டல்லோவால் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இதில் வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வர வேண்டும், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றிட வேண்டும், 


விவசாயிகள் பெற்றுள்ள கடன் முழுமையும் தள்ளுபடி செய்திட வேண்டும்,  பயிர் காப்பீட்டு திட்டத்தில் பாதிக்கப்படும் விவசாயிகள் உடன் உரிய இழப்பீடு பெரும் வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும், பருவ கால மாற்றத்தால் ஏற்படும் பேரழிவு பெருமழை மற்றும் வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பட்டினை காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன் மற்றும் சோமு ஆகியோர் செய்திருந்தனர்.

No comments

Copying is disabled on this page!