நெமிலி அருகே நாகவேடு கிராமத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் பெ.வடிவேலு பங்கேற்பு!
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நாகவேடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று முகாமினை தொடங்கி வைத்தார். இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, கூட்டுறவு உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை, வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை, காவல் துறை, சமூக நலன், மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வாழ்வாதார கடன் உதவிகள் போன்ற பல்வேறு துறைகள் இடம்பெற்றன.
இதில், நாகவேடு, பரிதிபுத்தூர், ஓச்சலம், அரும்பாக்கம், சித்தேரி, கீழாந்துறை, மேலாந்துறை போன்ற கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளித்தனர். இதில் நாகவேடு ஊராட்சி மன்ற தலைவர். ஆனந்தி பாலசுப்பிரமணியன், ஒன்றிய குழு உறுப்பினர். முருகேசன், துணை தலைவர். மீனாட்சி ராஜகோபால் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள். நவீன், பரத்ராஜ், ரோஷன் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments